பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.!

0 2131

பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஹோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை, சில தெரு நாய்கள் துரத்தியதால் எதிர்பாராத விதமாக சணல் பையால் மூடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சுய நினைவின்றி மீட்கப்பட்டான்.

இதனிடையே, சிறுவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர், சிறுவனின் குடும்பத்திற்கு .2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments