மன்னார்குடியில் ONGC குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் விவசாய நிலங்கள் பாதிப்பு.!

0 2680

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ONGC குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் சுமார் 3 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருப்புகிளார் என்ற கிராமத்தில் சுப்பிரமணியன் என்ற விவசாயிக்குச் சொந்தமான நிலம் வழியே செல்லும் ONGC குழாய்களில் ஒன்றில் உடைந்து, கச்சா எண்ணெயானது வெளியேறி வருகிறது.

பீறிட்டு வெளியேறும் கச்சா எண்ணெயானது சுற்றியுள்ள சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மணலை அப்புறப்படுத்தி, புதிய மணலை நிரப்பப்படும் என ONGC நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments