கல்குவாரி விபத்தில் தந்தை - மகன் கைது.. 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு..!

0 2262
கல்குவாரி விபத்தில் தந்தை - மகன் கைது.. 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு..!

நெல்லை கல்குவாரி விபத்தில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்களான தந்தை மற்றும் மகன் ஆகியோர் 14 நாள்  நீதிமன்ற காவலில் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

திசையன் விளையை சேர்ந்த சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோருக்கு சொந்தமாக அடைமிதிப்பான் குளத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள ஒருவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் மங்களூருவில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் மற்றும் குமாரை கைது செய்த தனிப்படை போலீசார், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments