எனக்கு பாப்பா பொறந்திருக்கு.. ! இனிப்பு மிட்டாய் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ..! 16 வயதினிலே திருமணத்தால் சிக்கல்..!

0 6213
எனக்கு பாப்பா பொறந்திருக்கு.. ! இனிப்பு மிட்டாய் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ..! 16 வயதினிலே திருமணத்தால் சிக்கல்..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்க்கும் ஆவலில் வந்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். 16 வயது சிறுமியை  பெரிய பெண் என்று திருமணம் செய்து வைத்த பெற்றோரால் நிகழ்ந்த விபரிதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் இருந்து சம்பவத்தன்று சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு குழந்தை திருமணம் தொடர்பாக அவசர புகார் ஒன்று சென்றது. 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் போதிய விவரம் இல்லாதவராக இருந்ததால், அவரிடம் விசாரணை செய்யமுடியாமல் போலீசார் தவித்தனர். அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுமியிடம் பக்குவமாக விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் தனக்கும் இரு வீட்டு பெற்றோர் செய்த திருமண ஏற்பாட்டின் பேரில் கடந்த ஆண்டு மே மாதம் 25ந்தேதி திருமணம் நடந்தது என்றும் முகப்பேரில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்த அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் அம்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக கூறி உள்ளார்.

பின்னர் சிறுமி வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மனைவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை வரவழைத்தனர்.

தனது மனைவிக்கு பாப்பா பொறந்திருக்கு என்று மகிழ்ச்சியுடன் இனிப்பு வாங்கி வந்த சதீஷ்குமாரை மடக்கிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை திருமணம் செய்தவதற்கு முன்பு பெண்ணின் வயது தனக்கு தெரியாது என்றும் திருமணத்திற்கு பின்புதான் சிறுமி என்பது தெரியவந்தது எனவும் கூறினார்.

ஆதார் அட்டை அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின் போது 16 வயது என்றும் தற்போது 17 வயது என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதல் பெற்றனர்.

மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தங்கள் வீட்டு சிறுமி பூப்பெய்தி விட்டாலே திருமணத்திற்கு தகுதியானதாக கருதி, பெண்களின் திருமணவயதான 18 வயதிற்குள் திருமணம் முடித்து வைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இளைஞர் மீதான போக்சோ வழக்கே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments