டோக்கியோ நகருக்கு இன்று இரவு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்க இன்றிரவு டோக்கியோ செல்கிறார். 2 நாட்களில் மொத்தமுள்ள 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். நேரத்தை வீணாக்காமல் இரவில் பயணித்து பகலில் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
நாளை முதல் 2 நாள் சுற்றுப்பயணத்திலும் இதே உத்தியை மோடி கடைபிடிக்க உள்ளார். இன்று இரவே அவர் டோக்கியோவுக்குப் புறப்பட உள்ளதாக பாஜகவின் ஐடி பிரிவுத்தலைவர் அமித் மாளவியா டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Comments