பிரிட்டன் பணக்காரர் பட்டியலில் இந்திய வம்சாவளியினர்.!

0 2617

பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

அவர்களின் சொத்துமதிப்பு 2847 கோடி பவுண்டுகள் ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். உருக்காலைத் தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சுமி மிட்டல் குடும்பம் 1700 கோடி பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஆறாமிடத்தில் உள்ளது.

வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் 920 கோடி பவுண்டு சொத்துமதிப்புடன் பதினாறாம் இடத்தில் உள்ளார். பிரிட்டன் நிதியமைச்சர் ரிசி சுனக் 73 கோடி பவுண்டு சொத்துமதிப்புடன் 222ஆவது இடத்தில் உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments