விருத்தாசலத்தில் “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக பலி.!

0 2617

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் மனைவி பரமேஸ்வரி திருவிழாவுக்காக தனது 10 மாத ஆண் குழந்தை கிஸ்வந்த் உட்பட 2 மகன்களுடன் சொந்த ஊரான தாழநல்லூர் சென்றுள்ளார்.

நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஸ்வந்த், பெயிண்ட்டிங் வேலைக்குப் பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை தவறுதலாக எடுத்துக் குடித்ததாகக் கூறப்படுகிறது. அலறித் துடித்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments