இங்கிலாந்தில் பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வரும் எலெக்ட்ரிக் கார் நிறுவனம்.!

0 1869

இங்கிலாந்தில் உள்ள எலெக்ட்ரிக் கார் நிறுவனம் ஒன்று பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகிறது.

லண்டன் எலெக்ட்ரிக் கார்ஸ் என்ற அந்த நிறுவனம் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக நிஸான் லீஃப் அல்லது டெஸ்லாவின் எலெக்ட்ரிக் என்ஜின்களை பொருத்துகிறது. இதன் மூலம் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படுகின்றன.

தற்போது புழக்கத்தில் உள்ள கார்களை பயன்படுத்துபவர்களும் சைலன்சரில் புகை வெளியேற்றத்தை நிறுத்தவும், காரின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கிலும் அவற்றை அனுப்பி எலக்ட்ரிக் கார்களாக மாற்றம் செய்ய கோரி வருவதாக இ.கார்ஸ் உரிமையாளர் குவிட்டர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments