இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைப்பு.!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, மாணவர் கூட்டமைப்பினர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைத்தியம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதனை மீறி அங்கு போராட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மாணவர்கள் கலையாததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனிடையே, கடந்த 9ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக ஆயிரத்து 348 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments