கள்ளக்குறிச்சியில் காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை.!

0 3746

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாவும் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன் இருவருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், போன் செய்தபோது சுதா பேசவில்லை என ஆகாஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆகாஷ் இறந்த துக்கத்தில் இருந்த சுதா, வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்காமல், விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 20 நாட்களுக்கு முன் காதலன் ஆகாஷ் வீட்டுக்குச் சென்ற சுதா, அவரது பெற்றோர் சம்மதத்துடன் அங்கேயே தங்கி இருக்கிறார்.

ஆகாஷின் இழப்பு அவரை தொடர்ந்து வாட்டவே, அவரது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments