அமேசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டு... ஒருவர் கைது... 3 பேருக்கு வலைவீச்சு!

0 1572

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அமேசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டார்.

முசிறியில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கம் போல பணி முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் அந்த கடை திறந்திருப்பதாக மேலாளருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண் உட்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments