நெஞ்சுக்கு நீதி ரீலீஸ்...உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்.!

0 1947

சென்னையை அடுத்த அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியானது.

இதையொட்டி அவரது ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், மரக்கன்றுகள் மற்றும் தலைக்கவசங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments