தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்

0 2194
தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர், பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.

ரயில்வே காலனியைச் சேர்ந்த முத்து என்பவரது இளைய மகன் சந்தோஷ், நேற்றிரவு தேர்வுக்காக நள்ளிரவு வரை படித்து விட்டு தந்தையின் அருகிலேயே உறங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்க்கையில், தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு தந்தை இறந்தது தெரியவந்துள்ளது. தந்தைக்கு இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில், மனவலிமையோடு அந்த மாணவர் பொதுத் தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து மாணவர் வீடு திரும்பியதும் அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments