உலகில் வலிமையான விமானப்படை தர வரிசைப் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்திய விமானப் படை - WDMMA

0 5595

வலிமையான விமானப்படை கொண்டுள்ள நாடுகளின் தரவரிசையில் இந்திய விமானப்படை, சீன விமானப்படையைக் காட்டிலும் முன்னிலையில் இருப்பதாக தி வேல்ட் டைரக்டரி ஆப் மாடர்ன் மிலிட்டரி ஏர்கிராப்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில், 242.9 புள்ளிகள் பெற்று அமெரிக்க விமானப் படை முதலிடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் அமெரிக்காவே 4 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. 69.4 புள்ளிகளுடன் இந்திய விமானப்படை 6வது இடத்தில் உள்ளது.

இந்திய விமானப்படையில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 1645 யூனிட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 63.8 புள்ளிகளுடன் சீனா விமானப்படை 7ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments