டேங்கர் லாரியும் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழப்பு

டேங்கர் லாரியும் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூர் மாவட்டத்தில் டேங்கர் லாரியும் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வியாழன் இரவு பத்தரை மணிக்கு சந்திரப்பூர் அருகே வந்தபோது எதிரே மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் டீசல் டேங்கரில் பற்றிய தீ, மற்ற லாரிக்கும் பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.
Comments