தி லெஜண்ட் படத்தின் 2 வது பாடலான வாடிவாசல் இன்று வெளியீடு

0 3907
தி லெஜண்ட் படத்தின் 2 வது பாடலான வாடிவாசல் இன்று வெளியீடு

லெஜண்ட் அண்ணாச்சியின் வாடிவாசல் பாடல் வெளியாகி , ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது...

சரவணாஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் 2 வது பாடலான வாடிவாசல் இன்று வெளியானது. நடிகை ராய்லட்சுமியுடன் ஜோடி போட்டு கிராமத்து குத்து பாட்டிற்கு மிக எளிமையாக ஆடி உள்ளார் அண்ணாச்சி.

அஜீத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அண்ணாச்சி வலிமையுடன் ஆடி இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே வெளியான தி லெஜண்ட் படத்தின் முதல் பாடல் ஹிட் அடித்த நிலையில், 2 வது பாடல் இன்னும் கலர்புல்லாக வந்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்

முன்னதாக வாடிவாசல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலை சூர்யா ரசிகர்களும் டுவிட்டரில் அதிகமாக பகிர்ந்ததால் தி லெஜெண்ட் படத்தின் வாடிவாசல் பாடல் வெளியாவதற்கு முன்னரே டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

லெஜண்ட் சரவணனின் படத்தில் இடம் பெற்ற வாடிவாசல் பாடலுக்காண முன் அறிவிப்பு அது, என்பதை தாமதமாக அறிந்த சூர்யா ரசிகர்கள் ஷாக் ஆனதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments