உதகையில் 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1573
உதகையில் 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

உதகையின் 200-வது ஆண்டு தினத்தை ஒட்டி, ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை துவக்கி வைத்த முதலமைச்சர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடத்தின் மாதிரியையும், '124 மலர் கண்காட்சி' என்ற பெயர் பலகையையும் பார்வையிட்டார்.

பின்னர், பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே மலர்களால் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், சுற்றுலா பயணிகளோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு, அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments