தடுமாறி விழுந்த கூலி தொழிலாளி மீது ஏறி இறங்கிய தனியார் பேருந்து.. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
தடுமாறி விழுந்த கூலி தொழிலாளி மீது ஏறி இறங்கிய தனியார் பேருந்து.. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்த போது அவர் மீது தனியார் பேருந்து ஏறிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
தோக்கவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஸ்வநாதன், அண்ணாநகரில் இருந்து திருச்செங்கோடு சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மண் சறுக்கி விழுந்த அவர், அங்கிருந்த இளைஞர் ஒருவரது உதவியுடன் வாகனத்தை தூக்கி நிமிர்த்தி விட்டு, மீண்டும் அதில் ஏற முயன்றார்.
அப்போது தடுமாறி கீழே விழுந்த அவர் மீது அவ்வழியாக சென்ற பேருந்து ஏறிச்சென்றது. பள்ளிப்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை விசாரித்து வருகின்றனர்.
Comments