கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்..!

0 2489
கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

நேற்று மாலை பணிமுடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்ற நிலையில் உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீ பிடித்து மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

2 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து மின்கசிவு காரணமாக நேரிட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் ஒரகடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments