அஸ்ஸாமில் வெள்ளம் மற்றும் கனமழையால் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.!
அஸ்ஸாம் வெள்ளத்தில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையால் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 27க்குட்பட்ட பகுதியில் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் சாலையில் விழுந்த பள்ளத்தை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாப்லாங் ரயில் நிலையம் இடிபாடுகளில் புதைந்து கிடக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
Comments