பாம்பிடமிருந்து எஜமானரின் உயிரைக் காப்பாற்றி விட்டு தன்னுடைய உயிரை விட்ட பாசக்கார நாய்..

கர்நாடக மாநிலம் கோலார் அருகே, நாய் ஒன்று நாகப்பாம்பிடமிருந்து எஜமானரின் உயிரை காப்பாற்றிள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் அருகே, நாய் ஒன்று நாகப்பாம்பிடமிருந்து எஜமானரின் உயிரை காப்பாற்றிள்ளது.
பங்காரப்பேட்டை பீரண்டஹள்ளியைச் சேர்ந்த அரசு பேருந்து ஊழியரான வெங்கடேசன் வீட்டில் வளர்க்கப்பட்ட அமெரிக்கன் புல்லி (American Bully) என்ற இனத்தைச் சேர்ந்த 3 வயது பெண் நாய் அதன் உரிமையாளர் செல்போனில் பேசியபடியே புல் வெளியில் படுத்திருந்த பாம்பை கவனிக்காமல் சென்ற நிலையில், அதனை கண்ட நாய் உடனடியாக சென்று, பாம்பை கொன்றது.
பாம்புடன் ஏற்பட்ட சண்டையில் பாம்பு கழுத்தில் கொத்தியதால் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
Comments