உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

0 2959

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.

கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷ்யா சில வாரங்களாக நிறுத்தியிருப்பதால் தூதரகம் மீண்டும் செயல்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

கீவ்-வுக்கு திரும்பும் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments