அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..

0 2469
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த அவர், ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சொந்த வாகனத்தில் சென்று விட்டு, மே மாத தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம்மையை உண்டுபண்ணும் வைரஸ்கள் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ் பாதிப்பாலேயே குரங்கம்மை பாதிப்பு ஏற்படும் நிலையில் சின்னம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி குரங்கம்மைக்கும் பலனளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments