போதை மாத்திரைகள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த 3 இளைஞர்கள் கைது.!

0 3597

சென்னையில், போதை மாத்திரைகள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு கொருக்குப்பேட்டையில், ராகுல் என்ற 19 வயது இளைஞரை 3 பேர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதை மாத்திரைகள் வாங்கித் தருவதாக கூறி ராகுல் அவர்களிடம் 20,000 ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றியதால் அவரை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments