செங்கல்பட்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நெல் வியாபாரி கழுத்தை இறுக்கி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண்.!

செங்கல்பட்டு அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நெல் வியாபாரி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரத்தி பகுதியைச் சேர்ந்த ரமேஷும், தென்காசியைச் சேர்ந்த பால்ராஜும் நெல் வியாபாரம் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் தென்காசியில் இருந்து செங்கல்பட்டுக்கு பால்ராஜ் நெல் ஏற்றி அனுப்பி வைத்த நிலையில், அதற்கான பணம் சுமார் ஒரு கோடி ரூபாயை கொடுக்காமல் ரமேஷ் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை கேட்டு பால்ராஜ், ரமேஷ் வீட்டுக்கு வந்த நிலையில், இருவரும் அனந்தமங்கலம் மலைப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாற, மதுபோதை தலைக்கேறிய ரமேஷ், பால்ராஜை கீழே தள்ளி தான் வைத்திருந்த துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரமேஷ் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார்.
Comments