மதுரையில் குடியிருப்பு பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!

0 1750

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கைத்தறி நகர் பகுதிக்கு வந்த இளைஞர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து ரகளை செய்துள்ளனர்.

புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நிலையூர் ஏ.டி காலனியைச் சேர்ந்த வினித், காளி என்பதும் அவர்களது உறவினர் ஒருவர் மீது அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்த ஆத்திரத்தில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments