வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையமாகக் கோவை உருவாகும் - முதலமைச்சர்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாகக் கோவை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று முதலமைச்சர் பேசினார். அப்போது, தொழில்களில் சிறந்த நகரம் கோவை என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில எடுப்புப் பணிகளுக்காக 1132 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். புத்தாக்கம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், வான்வெளி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாகக் கோவை உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments