சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழக அரசு

0 2235

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீதேறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. இக்கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அளித்த கருத்துருவினை பரிசீலனை செய்தும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும், ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments