ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விபத்து..! குழந்தை உட்பட 2 பேர் பலி..!

0 5618

கேரளத்தின் மூணாறு அருகே சுற்றுலா கார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில் அதிலிருந்த இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். ஆந்திரத்தில் இருந்து ஒரு சொகுசு காரில் 8 பேர் கேரளத்துக்குச் சுற்றுலா வந்தனர்.

மூணாறு அருகே கேப்ரோடு என்னுமிடத்தில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமுள்ள 500 அடி பள்ளத்தில் உருண்டது. காரில் இருந்த ஒரு ஆணும், ஏழு வயதுக் குழந்தையும் உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments