கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் பறிமுதல்

0 2296

எல்சல்வடார் நாட்டின் La Concordia கடல் பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு  2.25 மில்லியன் அமெரிக்க டாலராகும். கடலில் இருந்து 903 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை எல்சல்வடார் நாட்டு கடற்படையினர் சோதனை போட்டனர்.

அப்போது சரக்குகள் ஏற்றிச் செல்லும் பகுதியில் கோகைன் போதைப் பொருள் மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் மெக்சிகோ நாட்டின்  Oaxaca  மாகாணத்திற்கு அனுப்பப் ப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments