மணல் புயல் பாதிப்பால் கண்ணுக்கு மறைந்த புரூஜ் காலிஃபா கட்டடம்

0 2872

உலகின் மிகவும் உயரமான கட்டடமான புரூஜ் காலிஃபா மணல் புயலால் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மணல் புயல் வீசியது. அண்மையில் ஈராக், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலும் இது போன்ற மணல் புயல் வீசியது. நேற்று வீசிய மணல் சூறாவளிப் புயலால் புரூஜ் காலிஃபாவின் தோற்றம் மறைந்தது.

இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் பரவின. இதனிடையே அபுதானி நகரில் காற்று மாசு நிலைமையும் மோசமான முறையில் அதிகரித்தது. வாகன ஓட்டுனர்கள் மணல் புயல் வீசியதால் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments