அஸ்ஸாமில் 27 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு- 6.60 லட்சம் மக்கள் பாதிப்பு

0 1947

அஸ்ஸாம் மாநிலத்தில் பெருமழை காரணமாக 27 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாச்சார் மற்றும் பாரக் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன.

காம்புர் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாகவும் படகுகள் மூலமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திமா ஹசாவோ மாவட்டத்தில் சாலைகள், ரயில் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

இவற்றை சீரமைக்கவும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments