உருகி உருகி காதலித்த இளைஞர் கைவிட்டதால் நடிகை ஷெரின் செலின் விபரீதம்..! தூக்கில் தொங்கினார்

0 17247

திருநங்கை என்று சொல்ல முடியாத அழகுடனும், நளினத்துடனும் பெண் போலவே மலையாள ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷெரின் செலின் மேத்யூ.

மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

நீண்ட நேரமாக அவரது வீட்டுக்கதவு திறக்கபடாத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது செரின் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

அவரது சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த கொச்சி போலீசார், இது தொடர்பாக, செரினின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினை காரணமாக ஷெரின்  மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிணக்கூறு ஆய்வும் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஷெரின் தற்கொலை தொடர்பாக நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பதும், ஷெரினை உருகி உருகி காதலித்த அந்த இளைஞர், திருநங்கை என்பதை காரணம் காட்டி ஷெரினை கைவிட்டு சென்றுள்ளார்.

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று நண்பர்கள் போலீஸிடம் தெரிவித்து உள்ளனர்.

போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஷெரினின் காதலன் தலைமறைவானதால் அவனைப் பிடித்து விசாரணை நடத்துவதற்காக பாலாரிவட்டம் போலீசார் தேடி வருகின்றனர்.

தன்னுடைய திறமையால் இளம் நடிகையாகவும், மாடலாகவும் ஜொலித்த ஷெரின் செலின் தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments