உப்புத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து...12 தொழிலாளர்கள் பலி.!

0 2128

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கித் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

ஹல்வாடு என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் முப்பதுக்கு மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது வலுவிழந்த சுவர் இடிந்து விழுந்ததில் 20 பேர் வரை சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பொக்லைன் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments