ரூட்டு தல மோதல் விவகாரம்...மோதலில் ஈடுபட்ட மேலும் 2 மாணவர்கள் கைது.!

0 2106

சென்னையில், ரூட்டு தல மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி ரூட்டு மாணவர்களுக்கும் திருத்தணி ரூட்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

அவர்களுள் 2 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரம்பூர் ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த மாரிமுத்து, தமிழ்செல்வன் ஆகிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments