குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பிய நாய்.. கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை..!
குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பிய நாய்.. கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை தாக்கி வாயில் கவ்விய நிலையில், சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேர்பெட்டா பகுதியில் வளர்ப்பு நாய் பலத்த காயமடைந்திருப்பதை கண்ட உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார். அதில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, வளர்ப்பு நாயை தாக்கி வாயில் கவ்வியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின், சிறுத்தையின் பிடியில் சிக்கி நாய் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
Comments