தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பேருந்தின் மீது அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.
கொங்கணாபுரம் பகுதியில் சென்ற போது, எதிர்திசையில் சென்டர் லேனைக் கடந்து கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வருவதைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றிருக்கிறார்.
ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லூரி பேருந்து தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மரத்தின் மீது மோதி நின்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், எஞ்சின் பகுதியில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் உருக்குலைந்த நிலையில், தனியார் பேருந்தில் இருந்த பயணிகள், கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள், டிரைவர்கள் என சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர்.
Comments