அம்மாவுக்காக தங்கத்தை திருடினா கே.ஜி.எப்...! அம்மாவிடம் தங்கத்தை திருடிய கேடி கேர்ள்..! ஒரு கிலோ தங்கம் அபேஸ்..!

0 5823
அம்மாவுக்காக தங்கத்தை திருடினா கே.ஜி.எப்...! அம்மாவிடம் தங்கத்தை திருடிய கேடி கேர்ள்..! ஒரு கிலோ தங்கம் அபேஸ்..!

கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த காதலனுக்காக, தாய்க்கு சொந்தமான ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். காதலனுக்கு 3 கார்கள் பரிசளித்த பாரசீக ரோஜா சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரதனம்மா. இவரது மகள் தீப்திக்கு திருமணமாக நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ரத்நம்மாவின் வீட்டில் இருந்த ஒரு கிலோ அளவிலான ரத்னம்மாவின் பரம்பரை நகைகள் மாயமாகின. இது தொடர்பாக ரத்னம்மா போலீசில் புகார் அளித்தார்.

தாய், மகள் மட்டுமே வசித்து வரும் வீட்டிற்குள் இருந்த நகைகள் மாயமானது எப்படி என்று விசாரணையை முன்னெடுத்த போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் தீப்திக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த ஓட்டுனர் மதன் கொண்டுவரப்பட்டான்.

கொரோனா பாதிப்பால் கார் ஓட்டுனர்கள் வாழ்வில் பெரும் பொருளாதார இழப்புக்கள் ஏற்படுள்ள நிலையில் மதன் முன்பைவிட செல்வச்செழிப்புடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அண்மையில் மதன் 3 கார்களை வாங்கி உள்ளது குறித்து விசாரித்த போது தீப்தி பரிசளித்ததாக சமாளித்த மதன், ஒருகட்டத்தில் போலீசாரின் சிறப்பான கவனிப்பால் உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

கணவனை விவாகரத்து செய்து விட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தீப்தி கார் ஓட்ட கற்றுக் கொள்வதற்காக , மதனின் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார். கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் போது கைகள் தடம் மாறியதால் இருவரின் இதயங்களும் இடம் மாறி காதல் மலர்ந்துள்ளது.

தனது தாயிடம் ஏராளமான நகைகள் இருப்பதாக தெரிவித்த காதலி தீப்தியிடம், அவற்றை கொண்டு வாழ்வில் செட்டில் ஆவது குறித்து திட்டம் போட்டுள்ளான்.

அதன்படி வீட்டில் இருந்து தாய் ரத்னம்மாவின் நகைகளை ஒவ்வொன்றாக திருட தொடங்கிய தீப்தி, ஆரம்பத்தில் ஒவ்வொரு நகைக்கும் பதிலாக போலி நகைகளை வைத்துச் சென்றதால் தாய் ரத்னம் மா சந்தேகப்படவில்லை என்றும், போலி நகைகள் இருப்பதை தாய் கண்டுபிடித்து விடக்கூடாது என்று மொத்தமாக தூக்கிச் சென்றதால் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கிடையே தீப்தி திருடிக் கொடுத்த நகைகளை விற்று அண்மையில் 3 கார்களை வாங்கிய மதன், காதலி தனக்கு கொடுத்த பரிசு என போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

தன்னையும் தனது இரு குழந்தைகளையும் பாசத்துடன் பார்த்துக் கொண்டதால் தனது தாயின் ஒரு கிலோ எடையுள்ள நகைகளை திருடி விற்று, பணத்தை காதலனிடம் கொடுத்ததை தீப்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திருட்டு காதல்ஜோடி மதன் மற்றும் தீபதியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 725 கிராம் நகைகளையும், 3 கார்களையும் கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments