சென்னையில் இருந்து இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்ப நடவடிக்கை

0 2065

சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.

இதன்படி 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் மதிப்பிலான 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவற்றுடன் இலங்கைக்கு இன்று கப்பல் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments