அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கணவர் மீது வழக்குப்பதிவு

0 3592
அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கணவர் மீது வழக்குப்பதிவு

சேலத்தில், அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீராணம் பகுதியைச் சேர்ந்த மவுலியா - சந்தோஷ் குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில், மவுலியாவுக்கு அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது.

சந்தோஷ் குமரனுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லக்கூடாது என கூறி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு சந்தோஷின் நண்பரான கணேஷ் என்பவரும் உடந்தை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மவுலியா அளித்த புகாரின் பேரில் மருத்துவர் சந்தோஷ் மீதும் அவரது நண்பர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments