உள்நாட்டிலேயே கட்டப்பட்ட சூரத், உதய்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

0 2691
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட சூரத், உதய்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட சூரத் மற்றும் உதய்கிரி ஆகிய 2 போர்க்கப்பல்களை மும்பை மசாகன் துறைமுகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

15பி வகையைச் சேர்ந்த சூரத் போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த உதய்கிரி போர்க்கப்பலும் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டன. சூரத் போர்க்கப்பல் ஏவுகணை அழிப்பு திறன் கொண்டதாகவும், உதய்கிரி கப்பல் நவீன தாக்குதல் திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்சார்பு நிலையை அடைவதில் கவனம் செலுத்தி, நாட்டின் கடல்சார் திறனை மேம்படுத்த அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments