கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்தில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
அடைமிதிப்பான்குளத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் சுரங்க தொழில் வல்லுனர்கள், மண்ணியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, கல்குவாரி குத்தகைதாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகனை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
மேலும், விபத்தில் பலியான முருகன், செல்வனின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் பத்து லட்ச ரூபாயும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ஐந்து லட்ச ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments