தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் 21ஆம் தேதி வரை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments