உத்தரபிரதேசத்தில் களவாடிய சாமி சிலைகளை மீண்டும் ஒப்படைத்து மன்னிப்பு கடிதம் வைத்துவிட்டு தப்பியோடிய திருட்டுக் கும்பல்.!

0 2941

உத்தரபிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல், மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

தரூகா பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற 16 சிலைகளை, கடந்த 9ஆம் தேதி கும்பல் களவாடியது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், அதே கும்பல் கோவில் அர்ச்சகரின் வீடு அருகே 14 சிலைகளை வைத்துவிட்டு, மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டது.

அக் கடிதத்தில், சிலை களவாடிய நாள் முதல் தாங்கள் தூக்கமின்றி தவிப்பதாவும், கெட்ட கனவுகள் ஆட்டிப்படைப்பதாகவும் கொள்ளையர்கள் எழுதியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments