பஞ்சாப்பில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்.!

0 2744

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இரு சக்கர வாகனங்களில் ஊருக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல், மகளிர் கபடிக்கு நடுவே மற்றொரு கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 2 பேர் குண்டடிபட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை ஊர் மக்கள் விரட்டிப் பிடித்த நிலையில் மற்றவர்கள் தப்பியோடினர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments