அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வெளியேற முடியாமல் தவித்த 2,800 பயணிகளை பத்திரமாக மீட்ட இந்திய விமானப் படையினர்.!

0 2298

அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 2 நாட்கள் ரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 2 ஆயிரத்து 800 பயணிகளை இந்திய விமானப் படை வீரர்கள் மீட்டனர்.

கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவு பேரிடர்களால் லும்டிங், படார்புர் பகுதிகளில் இரண்டு ரயில்களை விட்டு வெளியேற வரமுடியாமல் ஏறத்தாழ 2 ஆயிரத்து 800 பயணிகள் தவித்தனர்.

கன மழை வெள்ளத்தால் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறன. 10 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

Dima Hasao மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்து வெள்ளத்தில் அடிக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments