வட கொரியாவில் 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதி.. மருந்து, மாத்திரைகள் விநியோக்கிக்கும் பணியில் ராணுவம் தீவிரம்..!

0 2567
வட கொரியாவில் 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதி.. மருந்து, மாத்திரைகள் விநியோக்கிக்கும் பணியில் ராணுவம் தீவிரம்..!

வட கொரியாவில் கொரோனா தொற்றில் இருந்து 6 லட்சம் பேர் குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பொது மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகிக்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா பணிகளை பார்வையிடும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டு உள்ளது. போதிய மருத்துவ வசதிக் குறைவால் கணக்கில் காட்டப்படும் அளவை விட வடகொரியாவில் நிலைமை மிக மோசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments