சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதல்

0 2906
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதல்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து மோதலில் ஈடுபட்ட நிலையில், பட்டாக்கத்திகள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹாரிங்டன் சாலையில், 20க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்களாலும், கைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததை அடுத்து, மாணவர்கள் சிதறி ஓடிய நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தாக்குதல் நடத்த கல்லூரி மதில் சுவர் அருகே 8 பட்டாக் கத்திகளையும், பல காலி மது பாட்டில்களையும் மாணவர்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பூந்தமல்லி மற்றும் திருத்தணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments