பிரான்சில் கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழா..!

0 2775

பிரான்சில் உள்ள லீலி நகரத்தில் கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரம்மாண்ட உட்டோப்பியா திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மனிதர்களுக்கும் மற்ற உயினங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு திருவிழாவில் பறக்கும் மீன் பொம்மை, வண்ணமயமான குதிரை, முயல் பொம்மைகள், மனித உருவத்தை போல் வடிவமைக்கப்பட்டிருந்த ராட்சத மரப்பாச்சி பொம்மை, நோய்வாய்ப்பட்ட டோடோ பறவை, கடல்குதிரை மற்றும் சிமெரா விலங்கு பொம்மைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

இசை மற்றும் நடனக்கலைஞர்கள் அவற்றுடன் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments