வானில் நிகழ்ந்த அழகிய சூப்பர் மூன் மற்றும் சந்திர கிரகணம்...பொதுமக்கள் கண்டுகளிப்பு.!

0 3348

லத்தீன் அமெரிக்காவில் வானில் நிகழ்ந்த இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் மற்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

அர்ஜெண்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ் மற்றும் கராக்கஸ், வெனிசுலா நாடுகளிலும் சூப்பர் மூன் நன்கு காட்சியளித்தது.

குறிப்பாக சிலி நாட்டின் சான்டியாகோ நகர வானில் அது சிறப்பாக காட்சியளித்தது.

பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் தோன்றும். அப்போது சந்திரனின் ஒளி, வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படுவதால் முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

அந்த முழு நிலவு பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது. அதே போல், முழு நிலவு பூமிக்கு அருகாமையில் வரும் போது அது பெரிதாக தோன்றும். அது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments